மேலும்

அகதிகள் படகை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப இந்தோனேசியா முடிவு

indonesia-tamils-boat (3)அவுஸ்ரேலியா நோக்கில் செல்லும் வழியில் மோசமான காலநிலை மற்றும் இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் படகு மீண்டும் இந்தியாவுக்கே பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணிப் பெண் மற்றும் 9 சிறுவர்கள் உள்ளிட்ட 44 இலங்கைத் தமிழ் அகதிகள் பயணித்த படகு ஆச்சே பிராந்தியத்தின் கரையில் இருந்து 300 மீற்றர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை இரவு உள்ளூர் மற்றும் மத்திய அரசாங்க அதிகாரிகளுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, படகை கரைக்கு கொண்டு வரவும் எரிபொருள் மற்றும் உணவு உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. எனினும், அவர்கள் திரும்பிச் சென்று விடவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இந்தோனேசிய உதவி அதிபர் யூசுப் கல்லாவும் பங்கேற்றிருந்தார்.

இலங்கை அகதிகளை சட்டவிருாத குடியேற்றவாசிகள் என்று குறிப்பிட்ட ஆச்சே பிராந்திய குடிவரவு அதிகாரியான சமடான்,  போதிய பயண ஆவணங்கள் இல்லாமை, பயண நோக்கத்தை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமை, காரணமாக அவர்களைத் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தப் படகு இந்தோனேசியாவை விட்டு, இந்தியா நோக்கி பாதுகாப்புடன் வெளியேற்றப்படும் என்று எப்போது  இது நடக்கும் என்று உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *