மேலும்

மாதம்: May 2016

சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு முடக்கப்பட்டது ஏன்?

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக, தகவல் வெளியிட்டதாலேயே, சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவு நேற்று முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து சீனா- சிறிலங்கா அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சு

சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவது தொடர்பாக, சிறிலங்காவும், சீனாவும் அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பில் இராணுவத்தை ஈடுபடுத்துவது சட்டவிரோதம்

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்துவது சட்ட விரோதம் என்பதனாலேயே, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி வெடிபொருள் மீட்பின் எதிராலி – சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவு முடக்கப்பட்டது

சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவின் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது.

மகிந்த அணியினர் மீது விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை

கிருலப்பனையில் கூட்டு எதிரணி நடத்திய மேநாள் பேரணியில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பிரபாவும் கைது

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட, முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளரான பிரபா எனப்படும், கிருஸ்ணபிள்ளை கலைநேசன் இன்று காலை ஏறாவூரில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு இன்று பிற்பகலுடன் முற்றாகவே நீக்கப்படவுள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போருக்காக 4 பில்லியன் டொலர் செலவிட்டதாக கூறுகிறார் மகிந்த

தனது அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் வெளிநாடுகளிடம் வாங்கப்பட்ட கடனில் மூன்றில் ஒரு பங்கு, போருக்காக செலவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மைத்திரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இம்மாத நடுப்பகுதியில் இந்தியா வருமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மைத்திரியின் உத்தரவை மீறி மகிந்த அணியின் பேரணியில் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தடையையும் மீறி, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று கூட்டு எதிரணி கிருலப்பனையில் நடத்திய மேநாள் பேரணியில் கலந்து கொண்டனர்.