மேலும்

மாதம்: May 2016

சம்பூரில் திரவ எரிவாயு மின் திட்டம் – மைத்திரியின் கோரிக்கைக்கு மோடி சாதகமான பதில்

சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டத்தை அமைக்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வர அமெரிக்கா வலியுறுத்தல்

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தமிழர்களைக் கொன்று விட்டு வெற்றிவிழா கொண்டாட முடியாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

போரில், எமது சகோதர இனத்தவரான தமிழர்களை கொன்று விட்டு நாம் போர் வெற்றிவிழா கொண்டாட முடியாது என சிறிலங்கா  பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மழையால் குறைந்தது வாக்களிப்பு – யாருக்குச் சாதகம்?

தமிழ்நாட்டில் நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில், 73.85 வீதமான வாக்காளர்களே வாக்களித்திருப்பதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 232 தொகுதிகளுக்கு நேற்றுக்காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றது.

கச்சதீவு தேவாலயம் இடிக்கப்படாது – சிறிலங்கா கடற்படைத் தளபதி

கச்சதீவில் உள்ள பழைமையான தேவாலயம் இடிக்கப்படாது என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

போர் வெற்றி விழா – மகிந்தவுக்கு அழைப்பு இல்லை

வரும் மே 18ஆம் நாள் நடைபெறவுள்ள, போர் வெற்றி நாள் நிகழ்வுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

விமானத்தில் குண்டு பற்றி வாக்குவாதம்- நோர்வே விமான நிலையத்தில் இலங்கையர் தடுத்து வைப்பு

ரயன் எயர் விமானத்தில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர், நோர்வேயின் மொஸ் விமான நிலையத்தில், நோர்வே காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார்.

உகண்டா பயணச் செலவை சிறிலங்கா அரசின் தலையில் கட்டிய மகிந்த

கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான, ஸ்ரான்ட்மோர் கிரசன்ட்டில் அந்த வதிவிடம், சிறிலங்காவின் விமானப்படை மற்றும் இராணுவத் தளபதிகளின் வதிவிடங்களுக்கு நடுவே உள்ளது.

பசுபிக் கட்டளைப் பீட உயரதிகாரியின் சிறிலங்கா பயணம் ஏன்? – அமெரிக்கா விளக்கம்

அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டமிடல் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ருடர், சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டமை தொடர்பான தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் விவகாரத்தை கைகழுவியது இந்தியா

இந்தியாவிலும், சிறிலங்காவிலும், 2014ஆம் ஆண்டுக்கு பின், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலும் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த, இலங்கைத் தமிழர் விவகாரம், முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக, இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு எழுதியுள்ள நூலில் கூறப்பட்டுள்ளது.