மேலும்

நாள்: 9th March 2016

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 பேர் தடுத்து வைப்பு – அமைச்சர் சுவாமிநாதன் தகவல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

தமிழரை பாரபட்சத்துடன் நடத்துகிறது, வாக்குறுதியை மீறுகிறது அரசாங்கம் – சம்பந்தன் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கமும் தமிழர்களைப் பாரபட்சத்துடன் நடத்துவதாக குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தகைய நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

சிறிலங்காவில் 3 குடிநீர் திட்டங்களுக்கு இந்தியா 400 மில்லியன் டொலர் கடனுதவி

சிறிலங்காவில் மூன்று குடிநீர் விநியோகத் திட்டங்களை மேற்கொள்வதற்கு 400 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது.  இதுதொடர்பான உடன்பாடு நேற்று இந்தியாவின் எக்சிம் வங்கிக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் பாகிஸ்தான் அதிபர்

சிறிலங்காவுக்கு குறுகிய காலப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசெய்ன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக மகிந்த அமரவீர தெரிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச்செயலராக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நேற்று முன்னிரவு நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  நிறைவேற்றுக்குழுக் கூட்டத்திலேயே இந்த தெரிவு இடம்பெற்றது.