ஜேர்மனி அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்
மூன்று நாள் அதிகாரபூர்வ பயயணமாக ஜேர்மனி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர், அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
மூன்று நாள் அதிகாரபூர்வ பயயணமாக ஜேர்மனி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர், அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிஎஸ்என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லெப்.யோசித ராஜபக்சவை , கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணையில் விடுவிக்க மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.
இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என்று முடிவு செய்யும் சுதந்திரம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க.
யார் எத்தகைய போராட்டங்களையும் நடத்தினாலும், அடுத்த மாதம் இந்தியாவுடனும், சீனாவுடனும் உடன்பாடுகளை கைச்சாத்திட்டே தீருவோம் என்று சூளுரைத்திருக்கிறார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் அரசதரப்பு சாட்சியாக மாறியுள்ளனர்.
தமிழர் தரப்புடன் இணக்கப்பாட்டுடன் பயணித்திருந்தால் இன்று இத்தனை இழப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் அதிகரித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஐதேகவில் இணையத் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சி.எஸ்.என் தொலைக்காட்சி நிதிமோசடிக் குற்றச்சாட்டில் லெப்.யோசித ராஜபக்ச குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவர் கடற்படையில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 23ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.