மேலும்

மாதம்: September 2015

குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம் பொறுப்புக்கூறலைப் பாதிக்கும் – ஐ.நா நிபுணர்

சிறிலங்காவில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரமானது, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை கமையாக பாதிக்கும் என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.

கட்டுநாயக்க திரும்பிய போர்க்குற்றவாளியான பிரிகேடியர் பின்கதவால் தப்பிச் சென்றார்

துருக்கியில் இருந்து நாடு திரும்பும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவைக் கைது செய்யக் கோரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் பின்கதவால் வெளியேறி தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு முக்கியமானது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

சிறிலங்காவின் முன்னேற்றங்கள், இந்தியாவுக்கும், தெற்காசியாவுக்கும், எமது கடற் பிராந்தியத்துக்கும் முக்கியமானது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரணில் – மோடி சந்திப்பு தொடங்கியது

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன.

சிறிலங்கா பிரதமருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா பேச்சு

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

எதற்காக மகிந்த இன்னமும் அரசியலில் இருக்கிறார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு பிரதமராகப் பதவி வகிக்கலாம் என மகிந்த விரும்பினால் அவருக்கு மைத்திரியின் ஆதரவும் தேவைப்படும். ஆனால் மைத்திரி ஒருபோதும் மகிந்தவுக்குப் பிரதமர் பதவியை வழங்க முன்வரமாட்டார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஆற்றிய உரை- (முழுமையாக)

கடந்தகாலத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், குத்துக்கரணங்களை வைத்து எம்மை எடைபோடாதீர்கள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என்று அனைத்துலகஅ சமூகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் – சுமந்திரன்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள சுதந்திரமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலத்தை அமைக்க இந்தியா கொள்கை ரீதியாக முடிவு

தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப்பாலத்தை அமைப்பது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொள்கை ரீதியாக முடிவெடுத்திருப்பதாக, இந்திய மத்திய இணை அமைச்சர் கல்ராஜ்  மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக நேற்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்தார். புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரவேற்றார்.