மேலும்

தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலத்தை அமைக்க இந்தியா கொள்கை ரீதியாக முடிவு

pambanதலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப்பாலத்தை அமைப்பது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொள்கை ரீதியாக முடிவெடுத்திருப்பதாக, இந்திய மத்திய இணை அமைச்சர் கல்ராஜ்  மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

”நாம் தலைமன்னாரையும், தனுஸ்கோடியையும் இணைக்கும் பாலத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

அது இரண்டு நாடுகளுக்கும் பல்வேறு முனைகளில் அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.

இது கொள்கை சார்ந்த நிலைப்பாடு. இதனை நாம் நடைமுறைப்படுத்துவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலத்தை அமைக்க இந்தியா கொள்கை ரீதியாக முடிவு”

  1. மனோ says:

    ஈழத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் கனவை நனவாக்குவதன் மூலம் சிங்களம் தனது இன அழிப்புக்கு நிரந்தரமான இந்தியத் துணையை ஏற்பதாகத் தெரிகிறது. முள்ளிவாய்க்கால் அழிப்பின் நோக்கம் இதன் மூலம் நிறைவு பெறும்.

    இதற்கு சிங்கள இன மேலாதிக்க அரசியல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பதில் பாலம் கட்டுதல் சாத்தியப் படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *