சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி கடும் வீழ்ச்சி – ஐரோப்பிய ஒன்றியத் தடையின் விளைவு
சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில், 41.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில், 41.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் முன்முயற்சியால் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிப் பிரகடனத்தில் சிறிலங்கா இன்று கையெழுத்திட்டுள்ளது. பீஜிங்கில் நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
உலக அமைதிச் சுட்டியில் சிறிலங்காவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டியில், சிறிலங்கா 114ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் நிறைவுற்று ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் போரின் போது தமது கணவன்மாரை இழந்து தவிக்கும் பெண்களின் நிலை இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை.
முப்பதாண்டுகால தீவிரவாதத்தை தோற்கடிப்பதில், முக்கிய பங்காற்றிய சிறிலங்கா கடற்படைக்கு, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்த குற்றச்சாட்டில், கைதடியில் வைத்து இரண்டு பேரை சிறிலங்கா காவலதுறையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து வரும் நிலையில், தனியானதொரு வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் மகிந்த ஆதரவு அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.