மேலும்

நாள்: 27th June 2015

சீனாவை முறியடிக்க சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்தியா போர்ப்பயிற்சி

இந்தியப் பெருங்கடலுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், சிறிலங்கா உள்ளிட்ட முக்கியமான ஆசிய பசுபிக் நாடுகளுடன் இந்தியா கடற்படைப் போர்ப்பயிற்சிகளை நடத்தவுள்ளது.  ரைம்ஸ் ஒவ் இந்தியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அஞ்சல் மூலம் வாக்களிக்க ஜூலை 14ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூலை 3ஆம் நாள் தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுதந்திரமான நீதி முறைமையை கொண்டுள்ளதாம் சிறிலங்கா – மெச்சுகிறார் இராணுவப் பேச்சாளர்

மிருசுவில் படுகொலை வழக்கில் இராணுவ அதிகாரியான சுனில் இரத்நாயக்கவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை, சுதந்திரமானதும், அசாதாரணமானதுமான நீதி முறைமையைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்செயலருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறார் மைத்திரி

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஐ.நா பொதுச்செயலருக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலால் பிற்போடப்படுகிறது க.பொ.தஉயர்தரத் தேர்வு

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், க.பொ.த உயர்தரத் தேர்வுகளைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு ஆதரவாக முகநூலில் திரண்டுள்ள 14 ஆயிரம் பேர்

மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு முகநூலில் ஆதரவு பெருகி வருகிறது.

மகிந்தவைப் பிரதமராக்குவதே தனது குறியாம்- பசில் கூறுகிறார்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, நாட்டின் அடுத்த பிரதமராக்குவதற்கு தான் முழுஅளவிலான பரப்புரைகளில் ஈடுபடப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஓகஸ்ட் 17இல் நாடாளுமன்றத் தேர்தல் – 10 நாட்களில் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

சிறிலங்காவின் ஏழாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ள நிலையில், எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஓகஸ்ட் 17ம் நாள்- திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.