மேலும்

நாள்: 10th June 2015

சுதந்திரக் கட்சியினர் நால்வர் பிரதி அமைச்சர்களாக நியமனம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இவர்கள், இன்று காலை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

பொதுத்தேர்தலும் போர்க்குற்ற அறிக்கையும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

காலத்திற்கு முன்னர் மைத்திரி அரசாங்கம் தேர்தலை நடத்தி, பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்கினால், இவ்வாறான போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான திட்டத்தை மைத்திரிபால சிறிசேன வரையமுடியும்.

தனது பயணம் சீனாவுடனான உறவை வலுப்படுத்துமாம் – சிறிலங்கா கடற்படைத் தளபதி கூறுகிறார்

சீனாவுக்கான தனது பயணம், சீன – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா  தெரிவித்துள்ளார்.

வடக்கில் தேர்தல் தொகுதிகள் குறைக்கப்படுவதற்கு அதுரலிய ரத்தன தேரர் எதிர்ப்பு

புதிய தேர்தல் முறையினால் வடக்கில் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அனைத்துலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர்.

சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்த தேர்தல்முறை மாற்றம் சிறுபான்மையினரைப் பாதிக்கும் – கபே

சிறிலங்கா பிரதமரினால் முன்வைக்கப்பட்டு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச்சட்ட யோசனை சிறுபான்மையினர் மற்றும் சிறுகட்சிகளைப் பாதிக்கும் என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) தெரிவித்துள்ளது.

வெலிக்கடைச் சிறைச்சாலை கலவரம் குறித்த விசாரணை அறிக்கை ரணிலிடம் கையளிப்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஊடகங்களின் நிலை குறித்து அறிய வருகிறார் அமெரிக்க உயர் அதிகாரி

கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவில் ஊடகங்களின் நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த வாரம் கொழும்பு வரவுள்ளார்.