மேலும்

நாள்: 21st June 2015

மைத்திரி வென்றது எப்படி?- ஆராய்கிறாராம் பசில்

மைத்திரிபால சிறிசேன தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை விளக்கும், ‘யுக பெரலிய’ என்ற நூலைப் படித்துள்ளதாகவும், தமது அரசாங்கத்தின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக தீர்மானிக்கவில்லை – ஜோன் செனிவிரத்ன

மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட உயர்மட்டக் குழு தீர்மானித்திருப்பதாக வெளியான செய்திகளை, அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.

உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை – சிறிலங்கா அறிவிப்பு

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்ளக விசாரணைக்கான சட்ட நடைமுறைகள் வரையப்பட்டு வருவதாகவும், இதில் அனைத்துலக  விசாரணையாளர்களுக்கோ சட்டவாளர்களுக்கோ இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இன்புளூவென்சா வைரசுக்கு இதுவரை 32 பேர் பலி – வடக்கிற்கும் பரவியது

சிறிலங்காவில் பரவி வரும் இன்புளூவென்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 மாத ஆட்சியில் கடன்படுநிலையின் எல்லையைத் தொட்டது சிறிலங்கா

சிறிலங்கா அரசாங்கத்தின் செலவுகள் கட்டுமீறிச் சென்று விட்ட நிலையில், கடன்படு நிலையின் எல்லையை தொட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரி வழங்க முன்வந்த கௌரவப் பதவியை நிராகரித்தார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்க முன்வந்த கெரளவப் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்தவை எப்படி பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும்? – மைத்திரி கேள்வி

மோசமான – ஊழல் ஆட்சியை நடத்தியதால் மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, எவ்வாறு எமது பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.