மேலும்

நாள்: 3rd June 2015

மலையகத் தமிழர் நலனுக்காக உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி

மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று தமிழ்க்கட்சிகள் இணைந்து- தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. கொழும்பு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ்மக்களின் நலனுக்காக இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

பதவி விலகினார் திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

கத்தோலிக்கத் திருச்சபையின் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது பதவியை விட்டு விலகியுள்ளார். அவரது பதவி விலகலை பாப்பரசர் பிரான்சிஸ், ஏற்றுக்கொண்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க சபாநாயகர் பரிந்துரை

சிறிலங்கா நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார். அரசியலமைப்பு சபைக்கான வெளியக உறுப்பினர்களின் நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு ஆரம்பமானது.

சிறிலங்காவின் புதிய பாதை அமெரிக்காவுக்கு கிடைத்த வரம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரி

நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கூடாது – நிமால் சிறிபால டி சில்வா

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு கூறுவதற்கு விக்னேஸ்வரன் ஒன்றும் சிறிலங்கா அதிபர் அல்ல, யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு சவால் விடுத்தார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதம் பந்துல குணவர்த்தன விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமான, முன்னைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை குறித்து விவாத்த்துக்கு வருமாறு மகிந்த ராஜபக்சவிடம் சவால் விடுத்துள்ளார்.

நாட்டை விட்டு ஓடமாட்டாராம் கோத்தா

தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் மூவருக்கு பிரதி அமைச்சர் பதவி – மகிந்த அணியை பலவீனப்படுத்துகிறார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

காவல்துறையினரை கல்எறிந்து கொல்லப்போவதாக எச்சரித்த மகிந்தவின் சகாவிடம் விசாரணை

மகிந்த ராஜபக்ச பிரதமரானதும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் கல் எறிந்து கொல்லப்படுவர் என்று எச்சரித்த, தென்மாகாண அமைச்சர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.