மேலும்

திருகோணமலையில் சிறிலங்கா அதிபருக்கு கடற்படை படகுகளின் அணிவகுப்பு மரியாதை

ms-trinco-navy-parade (4)முப்பதாண்டுகால தீவிரவாதத்தை தோற்கடிப்பதில், முக்கிய பங்காற்றிய சிறிலங்கா கடற்படைக்கு, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் நேற்று சிறிலங்கா கடற்படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படைக்கு தற்போது, தேசிய பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு, கடலோரப் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய பொறுப்புகள் இப்போது முன்னுரிமையாக உள்ளன.

இந்தச் சவால்களை சிறிலங்கா கடற்படை திறமையாக எதிர் கொள்ளும் என்றும் இதற்குத் தமது அரசாங்கம் துணையதாக இருக்கும் என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த நிகழ்வில் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் தொகுதியை மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

ms-trinco-navy-parade (1)

ms-trinco-navy-parade (3)

ms-trinco-navy-parade (4)

ms-trinco-navy-parade (2)

இந்த நிகழ்வில், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர், கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படைத் தலைமையகத்துக்கு முதல் முறையாகப் பயணம் செய்த மைத்திரிபால சிறிசேன, டொக்யார்ட்டில் உள்ள சமிக்ஞை நிலையத்தில் இருந்து கடற்படைப் படகுகளின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

சிறிலங்கா கடற்படையின், சயுர, சுரனிமல, உதர, ஜகதா, வீரய, ரணஜய, ஹன்சய ஆகிய போர்க்கப்பல்களும், அதிவேகத் தாக்குதல் படகுகள், கரையோர ரோந்துப் படகுகள், அரோ வகை தாக்குதல் படகுகள் என்பன துறைமுகத்தில் அணிவகுத்துச் சென்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *