மேலும்

நாள்: 2nd June 2015

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமனத்தில் சர்ச்சை – நாளை நாடாளுமன்றில் சூடு பறக்கும்

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 19வது திருத்தச்சட்டத்துக்கு அமைய உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபைக்கு, உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு அழைப்பு

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும், அதிபர் ஆணைக்குழு, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வித்தியா படுகொலையை அடுத்து புங்குடுதீவை விட்டு வெளியேறும் குடும்பங்கள்

மாணவி வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறி வருவதாக, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவிக்கிறது ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவு தெரிவித்து, ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஓமந்தையில் 14வயதுச் சிறுமி மர்ம மரணம் – வடக்கில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று மர்மமான நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமந்தை அருகே உள்ள வேலர் சின்னக்குளத்தில், வீட்டில் தனித்திருந்த இந்தச் சிறுமி, நேற்றுமாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நடுக்கடலில் 54 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை அவுஸ்ரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய காவல்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெரோல்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.