மேலும்

நாள்: 23rd June 2015

சீனாவிடம் பாரிய போர்க்கப்பலை வாங்குகிறது சிறிலங்கா

சிறிலங்கா கடற்படைக்கு பாரிய போர்க்கப்பல் ஒன்றை சீனாவிடம் இருந்து வாங்குவது குறித்து, சீன பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் ஒன்றும் கொம்புவைத்த வேற்றுக் கிரகவாசிகள் அல்ல- மங்கள சமரவீர

புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த கொம்பு வைத்த மனிதர்கள் அல்ல என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

அமெரிக்கா குறித்த அமெரிக்க அறிக்கையை தீவிரமாக கருத்தில் எடுக்க வேண்டும் என்கிறார் பீரிஸ்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமான விடயமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம் – எச்சரிக்கிறார் கோத்தா

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

அமெரிக்க கடற்படையுடனான போர்ப்பயிற்சியில் சிறிலங்கா கடற்படைப்படகு கவிழ்ந்தது

அமெரிக்க கடற்படையினருடன் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று, திருகோணமலைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் பலியானார்.

நாளை நள்ளிரவு கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை – 24ஆம் நாள்- நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கொள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானிடம் 14 போர் விமானங்களை வாங்க சிறிலங்கா கொள்வனவுக் கட்டளை

சிறிலங்கா விமானப்படைக்கு ஒரு ஸ்குவாட்ரன் (14 விமானங்கள்) ஜேஎவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொள்வனவு கட்டளைக் கடிதம், சிறிலங்கா அரசாங்கத்தினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி படுகொலை – காவல்துறையின் தவறுகள் குறித்த விசாரணை அறிக்கை கையளிப்பு

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்த சிறப்புக் காவல்துறைக் குழுவின் விசாரணை அறிக்கை சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் மீளாய்வு செய்யப்படும் – மங்கள சமரவீர

தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளின் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு நிதி ஒதுக்கவில்லை – ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ள புலம்பெயர்ந்தோருக்கான விழாவுக்கு, தாம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.