மேலும்

மாதம்: May 2015

சிராந்தி ராஜபக்சவிடம் நாளை விசாரணை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள்  குறித்து விசாரித்து வரும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு முன்பாக, சிராந்தி ராஜபக்ச நாளை முன்னிலையாகவுள்ளார். சிராந்தி ராஜபக்சவின் ஊடக இணைப்பு அதிகாரி அனோமா வெலிவிற்ற இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மிக் போர் விமானக் கொள்வனவு ஊழல் – இரகசிய வெளிநாட்டு வங்கிக்கணக்கு சிக்கியது

சிறிலங்கா விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்த போது, பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட இரகசிய வங்கிக் கணக்கு ஒன்றின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவின் பெறாமகன் உதயங்க வீரதுங்க டுபாய் விடுதியில் – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

சிறிலங்காவினால் தேடப்பட்டு வரும், ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாயில் தங்கியிருப்பதாக, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு சிறிலங்கா தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, சிறிலங்காவில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கக் கூடும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நான்கு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் சிங்கப்பூரில் பேச்சு நடத்தியது சிறிலங்கா குழு

சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்தியா, பிரித்தானியா, தாய்லாந்து, சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

விக்னேஸ்வரனின் கோரிக்கை – ரணிலுக்கு அறிவுரை கூறிய அஸ்கிரிய பீடாதிபதி

வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவம் விலக்கப்பட வேண்டும் என்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர், இத்தகைய கோரிக்கைகள் விடயத்தில் அரசாங்கம் விவேகத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசின் ஊழல்கள் குறித்த விசாரணைகள் தீவிரம் – அமெரிக்க அதிகாரிகள் உதவிக்கு வருகை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

அச்சத்தினால் புங்குடுதீவை விட்டு வெளியேறுகிறது வித்தியாவின் குடும்பம்

கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, புங்குடுதீவை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பூர் காணிகளில் இருந்து தமிழ்மக்கள் மீண்டும் விரட்டியடிப்பு

சம்பூரில், அண்மையில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட, காணிகளுக்குள் உரிமையாளர்கள் நுழைவதற்குத் தடைவிதித்துள்ள சிறிலங்கா காவல்துறையினர், அங்கு தற்காலிக குடில்களை அமைத்து தங்கியிருந்தவர்களையும், துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், வெளியேற்றியுள்ளனர்.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா விருப்பம்

ஒரு சீனா என்ற கொள்கையையும், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும் முழுமையாக ஆதரிப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சீனப் பாதுகாப்புத் தரப்பிடம் உறுதியளித்துள்ளார்.