மேலும்

நாள்: 19th June 2015

சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இந்தியத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 

சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்பாட்டில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா

சீனாவினால் முன்முயற்சி மற்றும் கூடுதல் மூலதனத்துடன் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இணைந்து கொள்ளும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

போலி நகைகளைக் கொடுத்து முன்னாள் போராளிகளை ஏமாற்றிய மகிந்த

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சார்பில் பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் போலி என்று தெரியவந்துள்ளது.

சீனாவைச் சார்ந்த வெளிவிவகாரக் கொள்கை மீளாய்வு – ஜப்பானில் மங்கள சமரவீர தெரிவிப்பு

சீனாவைச் சார்ந்திருக்கும் வெளிவிவகாரக் கொள்கையை சிறிலங்கா மீளாய்வு செய்யவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழருடனான பேச்சுக்களை வெளியில் இருந்து கவனிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம்

புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை வெளியில் இருந்து கவனித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை வடக்கு, கிழக்கு மக்கள் விரும்பவில்லை – தேசிய அரசுக்கே ஆதரவு

நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ள அதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் அதற்கு போதிய ஆதரவு அளிக்கப்படவில்லை.

மகிந்தவுக்கு இடமில்லை என்பது பொய்யாம் – ஜோன் செனிவிரத்ன கூறுகிறார்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் செனிவிரத்ன மறுத்துள்ளார்.