மேலும்

நாள்: 25th June 2015

கயானாவில் ஒரு தமிழ் பிரதமர்

தென் அமெரிக்காவில் உள்ள கரீபிய நாடான கயானாவின் பிரதமராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மோசஸ் வீராசாமி நாகமுத்து அண்மையில் பதவியேற்றுள்ளார்.

மிருசுவில் படுகொலை வழக்கில் சிறிலங்கா படை அதிகாரிக்கு மரணதண்டனை- நால்வர் விடுதலை

மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 8 தமிழர்களைப் படுகொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவ சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துள்ளது.

இன்றிரவு அல்லது நாளை இரவு சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்றிரவு அல்லது நாளை இரவு கலைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தாவின் குடியுரிமை பறிக்கப்படும்?

மிக்-27 போர் விமானக் கொள்வனவு தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டால், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குடியுரிமையை இழக்க நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலால் உள்ளக விசாரணை தாமதம் – மங்கள சமரவீர

சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதால், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்படுவதில் சில மாதங்கள் தாமதம் ஏற்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பை பலவீனப்படுத்த சிறிலங்கா முயற்சி

நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தி, விடுதலைப் புலிகளின் நிதி ஆதார வலையமைப்புகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று நாள் பயணமாக அப்துல் கலாம் இன்று சிறிலங்கா வருகிறார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடுகளின் மனித உரிமைகள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை இன்று வெளியாகிறது

உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மிக முக்கியமான அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.

நாடாளுமன்றம் நள்ளிரவு கலைக்கப்படவில்லை – ஊடகங்கள் ஏமாற்றம்

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.