மேலும்

நாள்: 7th June 2015

40 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா வருகிறார் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்

சுமார் நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை அன்பளிப்பு செய்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு எட்டு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – செவ்வாயன்று நாடாளுமன்றில் சூடுபறக்கும்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு வரும் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் தாமரைக் கோபுரம் – தெற்காசியாவுக்குப் பாரிய அச்சுறுத்தல்

இந்தியப் பெருங்கடல் பகுதியை, அமைதி பிராந்தியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்தியா மட்டுமல்ல; இப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் கருத்து. ஆனால், சர்வதேச பாதுகாப்பு ரீதியில் இந்தியப் பெருங்கடல், தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, வல்லரசு நாடுகள் முயன்று வருவதோடு, அதற்காகவே போட்டி போட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகின்றன.

லண்டனில் புலம்பெயர் தமிழருடன் மங்கள முக்கிய சந்திப்பு – சுமந்திரன், சொல்ஹெய்மும் பங்கேற்பு?

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றுடன் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.