மேலும்

நாள்: 28th June 2015

திருகோணமலையில் போட்டியிட புலிகளின் முன்னாள் முக்கிய பிரமுகர் விண்ணப்பம்

வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு, விடுதலைப் புலிகளின் முன்னாள்  முக்கிய போராளியான ரூபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பித்துள்ளார்.

மகிந்த அணியிடம் இரண்டு திட்டங்கள் – என்கிறார் விமல் வீரவன்ச

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என்றும், அவருடன் இணைந்து தேசிய சுதந்திர முன்னணியும் போட்டியிடும் என்றும் அந்தக் கட்சியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை

போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படாது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் யாழ், திருமலை, அம்பாறை மாவட்டங்களுக்கான ஆசனப்பங்கீடு குறித்து இறுதி முடிவு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடு குறித்து ஏற்கனவே பெரும்பாலும், இணக்கப்பாடு எட்டப்பட்டு விட்டதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் குதிக்க பிஜேபி ஆக உருமாறுகிறது பொது பல சேனா

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், பொது பலசேனா அமைப்பு, பொது ஜன பெரமுன ( பிஜேபி) என்ற பெயரில் போட்டியிடவுள்ளதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவு

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவாகும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜூலை 1இல் அதிகாரபூர்வ முடிவை மெதமுலானவில் வைத்து அறிவிக்கிறார் மகிந்த

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் ஜூலை 1ஆம் நாள் அறிவிக்கவுள்ளார். மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தலால் இரு கட்டங்களாக உயர்தரத் தேர்வு – ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தி

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால்,  க.பொ.த உயர்தரத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மகிந்த- மைத்திரி பனிப்போர் – ஜூலை 1இல் இறுதி முடிவு

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச அணிக்கும், மைத்திரிபால சிறிசேன அணிக்கும் இடையில் பனிப்போர் நடந்து வரும் நிலையில் ஜூலை 1ஆம் நாள் இறுதியான முடிவு ஒன்று தெரியவரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக அமெரிக்க கண்காணிப்பாளர்கள்?

சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க, அமெரிக்காவில் இருந்து முதல்முறையாக கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படவுள்ளனர்.