மேலும்

நாள்: 18th June 2015

தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள்

சிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மகிந்த போட்டியிட முடியாது – மைத்திரி அறிவித்து விட்டதாக உறுதிப்படுத்தினார் ராஜித சேனாரத்ன

நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக, அமைச்சரவை பேச்சாளரான, ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாரிசில் இருந்து கொழும்பு திரும்பிய சிறிலங்கன் விமானம் குலுங்கியது – 5 விமானப் பணியாளர்கள் காயம்

பாரிசில் இருந்து கொழும்பு வந்து கொண்டிருந்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், காற்றழுத்த மாறுபாட்டினால் குலுங்கியதால், விமானப் பணியாளர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர்.

ஜப்பானில் மங்கள சமரவீர – பொருளாதார உதவிகளை குறிவைக்கிறார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜப்பானுக்கான முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, அவர், ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியூமியோ கிஷிடா மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஜூன் 30இற்குப் பின்னர் நாடாளுமன்றம் வருகிறது 20ஆவது திருத்தச்சட்டம்

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம், இம்மாதம் 30ஆம் நாளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரமாக கூடுகிறது ஐதேக செயற்குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்

முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒபாமாவின் கொழும்பு பயணம் – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கும் தெரியாதாம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளது.

மகிந்தவுக்கு இடமளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டமாகத் தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.