மேலும்

நாள்: 30th June 2015

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக மைத்திரி ஏற்கவில்லை – அதிபர் செயலகம் அறிக்கை

மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அங்கீகரிக்கவோ அல்லது, பிரதமர் வேட்பாளராகப் பெயரிடவோ இல்லை என்று சிறிலங்கா அதிபர் செயலகம் இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வடக்கு படைத்தளங்களில் சிறிலங்காவின் புதிய இராஜதந்திரிகள்

வெளிநாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்கள் வடக்கிற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

சிறிலங்கா கடற்படைத் தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில் அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கொழும்பிலுள்ள மனிதாபிமான விவகாரப் பணியகத்தை மூடுகிறது ஐ.நா

சிறிலங்காவில் உள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புப் பணியகம், இந்த ஆண்டு இறுதியில் மூடப்படவுள்ளது.

மகிந்தவிடம் மண்டியிடுகிறார் மைத்திரி? – நிமால் மூலம் முடிவை அறிவித்தார்

பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட இடமளிப்பதா என்பது தொடர்பான தமது முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா மூலம் மகிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு என்ன என்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை,தேசிய கட்சிகள் தமது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்த வேண்டும்  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

‘மகிந்தவை வைத்து வெற்றி பெறுவதை விட தோல்வியடைவதே மேல்’

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட சிறிலங்கா சுதந்திரக் கட்சி வாய்ப்பளிக்கக் கூடாது என்று, அந்தக் கட்சியின் 36 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ரவிராஜ் படுகொலை வழக்கில் நேவி சமந்தவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான, சிறிலங்கா கடற்படை கப்டன் சமந்த முனசிங்கவுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.

யாழ், மட்டு., வன்னி, வேட்பாளர் ஒதுக்கீடு: இரண்டு நாட்களுக்குள் இறுதி முடிவு – செல்வம் அடைக்கலநாதன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இன்று அல்லது நாளை முடிவு செய்யப்படவுள்ளது.

கட்டுப்பணம் கையேற்கிறது சிறிலங்கா தேர்தல் திணைக்களம்

சிறிலங்காவில் எதிர்வரும்  ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.