மேலும்

நாள்: 6th June 2015

இறுதிப்போரின் உண்மையைக் கண்டறிய வேண்டியது முக்கியம் – பிரித்தானியத் தூதுவர்

போரினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தும் நடவடிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியும் செயற்பாடு முக்கியமானது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டுப் போர்ப் பயிற்சி குறித்து பாகிஸ்தான்- சிறிலங்கா இராணுவத் தளபதிகள் ஆலோசனை

நான்கு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் உயிரிழந்த இந்திய அமைதிப்படையினருக்கு பலாலியில் புதிய நினைவுத் தூபி

சிறிலங்காவில் உயிரிழந்த இந்திய அமைதிப்படையினரை நினைவு கூரும் நிகழ்வு பலாலிப் படைத்தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது.

காணாமற்போனோர் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்கிறதாம் அதிபர் ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஆணைக்குழுவின் செயலாளர் ஹேவா வாசலக குணதாச தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் கொழும்பு பயணம் மிகமுக்கியமானது- பாகிஸ்தான் நாளிதழ்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதன் பின்னணியில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி கொழும்புக்கு மேற்கொண்டுள்ள பயணம் மிக முக்கியமானது என்று பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி, அடையாளப் பட்டியைக் காணவில்லையாம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது தனிப்பட்ட பயன்பாட்டில் இருந்த விலைமதிப்பானதும், சக்திவாய்ந்ததுமான கைத்துப்பாக்கி மற்றும் அவரது அடையாளத் தகடு உள்ளிட்ட பொருட்கள் காணாமற்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் ஜெனிவா கூட்டத்தொடரில் மைத்திரியும் பங்கேற்கிறார்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்ரெம்பர் மாத அமர்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார்.