மேலும்

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் மீளாய்வு செய்யப்படும் – மங்கள சமரவீர

mangala samaraweeraதடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளின் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அதிபர் தேர்தல் வருவதை அறிந்து, நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர் பெறுவதாக சித்தரிக்கும் வகையில் மகிந்த ராஜபக்ச அவசர அவசரமாக இந்த தடைப் பட்டியலை தயாரித்திருந்தார்.

இதில் 05 அல்லது 06 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் நம்பகத்தன்மையை மீள உறுதி செய்யும் நோக்கில் தடைப்பட்டியலை மீளாய்வு செய்யும் வேலைத்திட்டத்தில் புதிய அரசாங்கம் களமிறங்கியுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைப்பதே, புலம்பெயர்ந்தோருக்கான விழாவின் நோக்கமாகும்.

எனினும் தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இருக்கும் அனைவரும் தீவிரவாதிகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் பெயர்களும் அந்த பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாம் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் பேச்சு நடத்துகின்றோம்.

இதன்படி பிரிவினைவாதம் இல்லாத ஒன்றிணைந்த இலங்கையை உருவாக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

புலம்பெயர் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டுமென்பதே மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கிய கொள்கையாகும். அவர் செய்ய தவறியதை நாம் செய்கிறோம்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையை வாசிக்க தவறிவிட்டமைக்காக நான் வருந்துகிறேன்.” என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *