மேலும்

நாள்: 25th April 2015

நேபாளம் செல்கிறது சிறிலங்கா விமானப்படை விமானம் – இலங்கையரை மீட்டு வரும்

நிலநடுக்கத்தினால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் உள்ள இலங்கையர்களை மீட்டு வருவதற்காக சிறிலங்கா விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்று காத்மண்டுவுக்கு செல்லவுள்ளது. நேபாளத்தில் இன்று நிகழ்ந்த மோனமான நிலநடுக்கத்தில், குறைந்தது 1130 பேர் பலியானதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.

உள்நாட்டு விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிடவில்லை- சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் – வாயைப் பிளந்த மங்கள சமரவீர

சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு, சென்று, பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது.

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி தமக்கு எதிரான சூழ்ச்சியாம் – குற்றம்சாட்டுகிறார் மகிந்த

ராஜபக்சக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகளைப் பயன்படுத்தியது, ஒரு சூழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

நேபாளம், வட இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலஅதிர்வு- சிறிலங்காவுக்கு பாதிப்பில்லை

நேபாளத்திலும், வட இந்தியாவிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நில நடுக்கத்தினால் சிறிலங்காவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திங்கள் இரவு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நடந்தது என்ன?

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்களை, சிலோன் ருடே நாளிதழில், பிரசாத் மஞ்சு எழுதியுள்ள கட்டுரையில் சுவையாக விபரித்துள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

புலம்பெயர் தமிழ்க்கல்வி – முயற்சிகளும் சவால்களும்: நோர்வேயில் ஆய்வரங்கு

புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஆரோக்கியமான கருத்தாடலுக்கான ஆய்வரங்கு ஒன்றினை நோர்வே தமிழ் 3 வானொலி எதிர்வரும் மே 1ஆம் நாள் (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்துள்ளது.

மைத்திரியைச் சந்திக்க மறுத்த மகிந்த – பின்னணி அம்பலம்

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாலேயே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு, நீதி அமைச்சுகள் ஒத்துழைக்கவில்லை – அதிபர் ஆணைக்குழு குற்றச்சாட்டு

காணாமற்போனோர் குறித்த விசாரணைக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சுக்கள் ஒத்துழைக்கவில்லை என்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் – நெறிமுறையை மீறினாரா விக்னேஸ்வரன்?

பிரேமானந்தா வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நான்கு இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக கவனம் செலுத்தக் கோரி, வட மாகாண முதலமைச்சர் , இந்தியப் பிரதமருக்கு அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பியிருந்தால், அது நெறிமுறை மீறலாக இருக்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.