மேலும்

நாள்: 8th April 2015

யாழ். ஊடகவியலாளர் சிறையில் அடைப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழில், பிரதேச செய்தியாளராகப் பணியாற்றும், ஊடகவியலாளர் ஒருவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்

யாழ்ப்பாணத்தில், தூய குடிநீருக்கு உத்தரவாதம் அளிக்கக் கோரி, நேற்று முதல் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், இன்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவின் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் தினமும் 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

பிரித்தானியாவில் நாளொன்றுக்கு 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள், கைது செய்யப்படுவதாக, அந்த நாட்டின் குடிவரவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, தி ரெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சிங்கப்பூரில் மரணம்

சிறிலங்காவின் மிகவும் செல்வாக்குப் பெற்ற இரண்டு பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின், மகாநாயக்க தேரரான, வண.உடுகம சிறீ புத்தரகித்த தேரர், இன்று சிங்கப்பூரில் காலமானார்.

ஐபிஎல் துடுப்பாட்டத் தொடர்: சென்னைப் போட்டிகளில் சிறிலங்கா வீரர்களுக்கு அனுமதி மறுப்பு

இந்தியாவில் ஆரம்பமாகியுள்ள ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டித்தொடரில், பங்கேற்கும் அணிகளில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் திருமண பந்தத்தில் போருக்குப் பின்னர் கையாளப்படும் புதிய அணுகுமுறை

வெளிநாடுகளில் வாழும், பணிபுரியும், புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவதற்கான புதியதோர் மரபுசாரா முறைமை ஒன்றை, புலம்பெயர் தமிழர்கள் போருக்குப் பின்னான புதிய அணுகுமுறையாக உருவாக்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ரணில் அரசுக்குப் படுதோல்வி – வங்குரோத்து நிலையில் திறைசேரி?

நிதி நெருக்கடியைச் சமாளிக்க உள்நாட்டில் திறைசேரி உண்டியல் மூலம், மேலதிகமாக 400 பில்லியன் ரூபா வரையிலான கடனைத் திரட்டும், சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சி, நாடாளுமன்றத்தில் நேற்று தோற்கடிக்கப்பட்டது.

வல்லமை தாராயோ…!

நட்டாற்றில் விடப்பட்டது போல், இரண்டாவது தடவை நாம் உணர்ந்து, இன்றோடு ஒரு மாதம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்கால் பேரழிவு முதல்முறையாக எம்முள் அந்த உணர்வை ஏற்படுத்தியது.