மேலும்

நாள்: 27th April 2015

மைத்திரி வாக்குறுதி – உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சோபித தேரர்

19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அமைப்பாளருமான கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி வண.மாதுளுவாவே சோபித தேரர், கைவிட்டுள்ளார்.

பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் – அல்- ஜசீராவுக்கு மகிந்த செவ்வி

நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவமயமாக்கல்: சிறிலங்காவின் நிலையான அமைதிக்கு முக்கிய சவால்

2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போரின் மூலம் சிங்கள தேசம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவப் பலத்தை முதலில் குறைக்க வேண்டும்.

’19’ மீதான விவாதம் தொடங்கியது – அனைவரையும் ஆதரிக்க மைத்திரி கோரிக்கை

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று காலை 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று காலை ஆரம்பமாகி சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறப்பு உரையாற்றியதையடுத்து, விவாதம் ஆரம்பமானது.

19வது திருத்தத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் சோபித தேரர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி வண மாதுளுவாவே சோபித தேரர், இன்று 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம் – நிறைவேறுமா 19?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று, பரபரப்பான சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த 19வது திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சிறிலங்கா பயணத்தை கடைசி நேரத்தில் ஒத்திவைத்தார் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், சிறிலங்காவுக்கு இன்று மேற்கொள்ளவிருந்த பயணத்தைப் பிற்போட்டுள்ளதாக, இந்திய இராணுவத் தலைமையகம் நேற்றிரவு அறிவித்துள்ளது. 

சிராந்தி ராஜபக்ச, யோசித ராஜபக்ச அடுத்த சில நாட்களுக்குள் கைது?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவையும், மகன் யோசித ராஜபக்சவையும், அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

33 மாணவர்களுடன் நேபாளத்தில் இருந்து திரும்புகிறது சிறிலங்கா விமானப்படை விமானம்

நேபாளத்துக்கு உதவிப் பொருட்களையும், மீட்பு அணியொன்றையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானம், காத்மண்டுவில் இருந்து 33 மாணவர்களுடன் இன்று கட்டுநாயக்கவுக்குத் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.