மேலும்

நாள்: 11th April 2015

சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உடனடியாக விலகும் சாத்தியம் இல்லை

சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள, மீன் ஏற்றுமதித் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும் சாத்தியங்கள் இல்லை என்றும், இந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே தடை நீக்கம் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லை., கிளிநொச்சி மாவட்டங்கள் சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனம்

வடக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளன.

சிறிலங்காவில் அசாதாரணமான மாற்றங்கள் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜோன் கெரி

கடந்த சில மாதங்களில், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான – சாதகமான மாற்றங்கள், இலங்கைத்தீவில் உள்ள மக்கள் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காக ஒன்றுபடும் புதிய வாய்ப்புகளை அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீன, சிறிலங்கா படைகள் பங்கேற்கும் ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு’ போர்ப்பயிற்சி

‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு -2015’ என்ற பெயரில், சிறிலங்கா இராணுவத்துக்கும், சீன மக்கள் ஆயுதக் காவல்படைக்கும் இடையில் புதிய போர்ப் பயிற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஜோன் கெரி – அதன் பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அவரது வருகைக்குப் பின்னரே சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுன்னாகத்தில் 73 வீத கிணறுகளில் எண்ணெய் மாசு – நீரைப் பருக வேண்டாம் என்கிறார் ஹக்கீம்

சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள பல கிணறுகளில் கிறீஸ் படிமங்களும் கழிவு எண்ணெய் மாசுகளும் படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் உள்ள கிணறுகளின் நீரைப் பருகுவதை தவிர்க்குமாறு சிறிலங்காவின் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தர வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம்

சிறிலங்காவின் தேர்தல் சட்டம் மற்றும் சிறிலங்கா மற்றும் கொமன்வெல்த் நாடாளுமன்ற விதி முறைகளுக்கு அமைய, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரியுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினரை நாடு கடத்த கனேடிய உயர்நீதிமன்றம் தடை

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரிவசூலிப்பாளராக பணியாற்றியவரை கனடாவில் இருந்து நாடு கடத்துவதற்கு, கனேடிய சமஷ்டி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.