மேலும்

நாள்: 29th April 2015

இரண்டாவது மீட்புக் குழுவை பயணிகள் விமானத்தில் அனுப்பியது சிறிலங்கா

நிலநடுக்கத்தினால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, 97 சிறிலங்கா படையினரையும், 17 தொன் எடையுள்ள அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிய இரண்டாவது விமானம் இன்று சிறிலங்காவில் இருந்து காத்மண்டு சென்றது.

19வது திருத்தத்தை நிறைவேற்றிய சிறிலங்காவுக்கு பிரித்தானியா பாராட்டு

19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில், சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானியத் தூதுவர், ஜேம்ஸ் டௌரிஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்டம் குறித்த அரசின் நிலைப்பாட்டை வெளியிட ஜூன் 15 வரை காலஅவகாசம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, வெளிப்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறிலங்காவின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக 200 படை அதிகாரிகள், 40 மோப்ப நாய்கள் சிறிலங்கா வருகை

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 200 பேர், 40 மோப்ப நாய்கள் சகிதம், சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா விசாரணை அறிக்கையில் ஆச்சரியங்கள் இருக்கும்- ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெரிவிப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மயூரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது இந்தோனேசியா

அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளித் தமிழரான மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு, இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

’19’ஐ நிறைவேற்ற நாடாளுமன்றதில் நேற்று முழுவதும் மைத்திரி நடத்திய போராட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று முழுநாளும் நாடாளுமன்றத்திலேயே தங்கியிருந்தார்.

கடைசி நிமிடம் வரை இழுபறி – ஐதேக, கூட்டமைப்பு விட்டுக் கொடுத்ததால் தீர்ந்தது

சிறிலங்காவின் 19வது திருத்தச்சட்டத்தில், அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்திலேயே நேற்று கடைசிநேரம் வரை இழுபறி காணப்பட்டது. எனினும், பிடிவாதமாக இருந்த ஐதேகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடைசியில் இறங்கி வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

மூன்றாவது வாசிப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது 19வது திருத்தச்சட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றிரவு நடந்த குழுநிலை விவாதங்களுக்குப் பின்னர், 19வது திருத்தச்சட்டத்தின் மூன்றாவது வாசிப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.