மேலும்

நாள்: 3rd April 2015

நாளை மறுநாள் பாகிஸ்தான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் பாகிஸ்தானுக்கு தனது முதலாவது அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

தலாய்லாமாவுக்கு நுழைவிசைவு மறுக்கும் சிறிலங்கா – சீனா வரவேற்பு

திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவு வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு சீனா வரவேற்புத் தெரிவித்துள்ளது.

வடக்கில் கைத்தொழில் வலயங்களை உருவாக்க சீனா விருப்பம் – இந்தியாவுக்குப் போட்டி

சிறிலங்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில், கைத்தொழில் அல்லது பொருளாதார வலயங்களை நிறுவ சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஜியாங்லியாங் இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொம் சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் 10 ஆயிரம் ஆண்டுக்கு முந்திய இளம்பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள புலத்சிங்கள, பஹியங்கல பகுதியில் மீட்கப்பட்ட ஆதிகால மனித எலும்புக்கூடு, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய, இளம்பெண் ஒருவருடையது என்று, பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பல்லைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாட்டை ஒன்றுபடுத்தும் வாய்ப்பை சிறிலங்கா தவறவிட்டு விட்டது – அமெரிக்க உயர் அதிகாரி

முப்பதாண்டுகாலப் போருக்குப் பின்னர், 2009ம் ஆண்டு நாட்டை ஒன்றுபடுத்தக் கிடைத்த வாய்ப்புகளை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளதாகவும், இதனால், நல்லிணக்கத்தை அடைவதற்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் கூட்டமைப்பும் இறங்கியது

வடக்கு கடற்பரப்பில், மீன்பிடிக்கும் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

சீனாவுடனான உறவுகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா அமைச்சர் உறுதி

சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம், உறுதியளித்துள்ளார்.