மேலும்

நாள்: 21st April 2015

நாடு திரும்பினார் பசில் – கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் வெளியார் நுழையத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாடு திரும்பியுள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரேணை கொண்டு வர முயற்சி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் 27ம் நாள் வரை ஒத்திவைப்பு – மகிந்த ஆதரவாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டமும் வரும் 27ம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குள் மதுபானம் அருந்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்? – சபையில் குழப்பம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சபை நடவடிக்கைகள், சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையைத் தொடர விடாமல் போராட்டம் நடத்தினர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள மகிந்த ஆதரவாளர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும், சிறிலங்கா நாடாளுமன்ற வளாகப் பகுதியி்ல் பெரியளவிலான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.

அழைப்பாணை விடுக்க முன்னர் அறிவிக்க வேண்டும் – சபாநாயகர் உத்தரவு

இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு, அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு முன்னதாக,  சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று, சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவி்ட்டுள்ளார்.

மகிந்தவிடம் வீட்டுக்குச் சென்றே விசாரணை – ஆணைக்குழு தலைவர் இணக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருப்பிடத்துக்குச் சென்றே விசாரிக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அழைப்பாணை புத்தாண்டுப் பரிசு – என்கிறார் மகிந்த

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சூடுபிடிக்கும் சிறிலங்கா அரசியல் களம் – அடுத்தது என்ன?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவைக் காப்பாற்ற இரவிரவாக நாடாளுமன்றத்துக்குள் தவம் கிடந்த ஆதரவாளர்கள்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, அவரது ஆதரவாளர்களான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுமார் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரவிரவாக நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்தினர்.