மேலும்

நாள்: 10th April 2015

ஏப்ரல் 14 : இலங்கையர்களுக்கு மோடி கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படுமா?

சிறிலங்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் 14ம் நாள் தொடக்கம், வருகை நுழைவிசைவு வழங்கப்படும் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஊவா முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம் விசாரணை

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம், நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு காவல்துறைக் குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

உதயங்க வீரதுங்க குறித்து விரைவில் அறிக்கை – மங்கள சமரவீர வாக்குறுதி

ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க உக்ரேனிய பிரிவினைவாதப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தில் கருத்து வாக்கெடுப்புக்கு விட வேண்டிய பகுதிகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தில், அரசியலமைப்புடன் உடன்படாத- நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் கருத்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

குடிநீரில் அரசியலைப் புகுத்தாதீர் – வடக்கு மாகாண முதலமைச்சர் வேண்டுகோள்

யாழ்.குடாநாட்டில் எழுந்துள்ள குடிநீர்ப் பிரச்சினையில் அரசியலைப் புகுத்த வேண்டாம் என்று கோரி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.