மேலும்

நாள்: 12th April 2015

19வது திருத்தத்தை எதிர்த்தால், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடையாது- மைத்திரி கடும் போக்கு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் இப்போது கவனம் செலுத்தப்படாது – விஜேதாச ராஜபக்ச

19வது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரையில், சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நன்றாக கையாளப்பட்டால் சிறிலங்கா உலகிற்கு முன்னுதாரணமாக அமையும் – ஐ.நா நிபுணர்

நன்றாக கையாளப்பட்டால், பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும், நிலையான அமைதியை எட்டுவது என்பதில் சிறிலங்கா விவகாரம் ஒரு முன்னுதாரணமானதாக இருக்கும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் சிறிலங்கா வருவதற்கு வாய்ப்பு –வொசிங்டனில் இருந்து தகவல்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கூட, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக, வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் அனுப்பியுள்ளது.

சிறிலங்காவில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது – என்கிறது சீனா

சிறிலங்காவில் தமக்கு எந்த மறைமுகமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ரென் பகியாங் தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆதரவாளர்களைக் களையெடுக்கத் தொடங்கினார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறங்கியுள்ளார்.

வடக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு – கூட்டமைப்பு கோரிக்கை

இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமரும் வரை, வடக்கு மாகாணத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கோரியுள்ளன.