மேலும்

நாள்: 9th April 2015

ஜூன் இறுதியிலேயே உள்நாட்டு விசாரணை அறிவிப்பு – பின்வாங்குகிறார் மைத்திரி

சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான பொறிமுறை பற்றிய விபரங்களை வரும் ஜூன் மாத இறுதியிலேயே வெளியிடவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வரும் 20ம் நாளுக்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பு – சிறிலங்கா அதிபர் அறிவிப்பு

19வது திருத்தச்சட்டமூலம் வரும் 20ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்து வெளியானது

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு இசைவானதே என்றும், எனினும் இதன் சில பகுதிகளை நிறைவேற்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் வியாக்கியானம் தெரிவித்துள்ளது.

யேமன் மீட்பு நடவடிக்கை – சீனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

சீன மக்கள் விடுதலை கடற்படை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டும் போது, சீனாவானது பூகோள இராணுவப் பிரசன்னம் அனைத்துலகிற்கு நலன் பயப்பதாக நியாயப்படுத்துகிறது.

கடலடி மின்வழித்தட இணைப்பு திட்டம் குறித்து சிறிலங்காவே முடிவெடுக்க வேண்டும் – இந்தியா

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின் வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய அரசுத் துறை நிறுவனமான பவர் கிரின்ட் கோப்பரேசன் தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் ஜெயகாந்தன், பாடகர் நாகூர் ஹனீபா ஒரே நாளில் மறைவு

பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனும், பிரபல இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனீபாவும், நேற்று சென்னையில் காலமாகினர்.  பிரபல எழுத்தாளரான ஜெயகாந்தன், உடல் நலக்குறைவால் நேற்றிரவு  9 மணியளவில், காலமானார். அவருக்கு வயது 81.

சுசிலிடம் பந்தை வீசினார் சபாநாயகர் – சம்பந்தனுக்கு வாய்ப்புக் குறைவு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, அந்தப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரின் பெயரைத் தருமாறு கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜெயந்தவிடம் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பதவி விலகாவிடின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கம் பதவி விலகாது போனால், அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார்.