மேலும்

நாள்: 14th April 2015

இலங்கையர்களுக்கு வருகை நுழைவிசைவு வழங்குகிறது இந்தியா

சிறிலங்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்திய விமான நிலையங்களில் வைத்து வருகை நுழைவிசைவு வழங்கும் நடைமுறை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

9 மாதங்களில் மத்தல விமான நிலையம் ஊடாக 30 ஆயிரம் பேரே பயணம்

சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையத்தின் ஊடாக, கடந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் வரையான 9 மாதங்களில், சுமார் 30 ஆயிரம் பயணிகள் மாத்திரமே பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்மக்களின் உளவியலைப் பாதித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பு

தமது நேசத்திற்குரியவர்கள் உயிர்நீத்த பின்னர் அவர்களை மீண்டும் மீண்டும் நினைவுகூருவதற்கான ஒரேயொரு இடமாகக் காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் உளவியலை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. இராணுவத்தால் இவை நிர்மூலமாக்கப்பட்டமையால் தமிழ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

ஐ.நா விசாரணைக்கு சிறிலங்கா ஆதரவு வழங்க வேண்டும் – புத்தாண்டுச் செய்தியில் பிரித்தானிய பிரதமர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற அட்டூழியங்கள் குறித்த ஐ.நா விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் படுமோசமான நிலையில் ஊடக சுதந்திரம் – அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு, சுதந்திர ஊடக இயக்கமும், அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

மனித உரிமைகள், ஜனநாயகம், பொறுப்புக்கூறல் குறித்து சிறிலங்காவுடன் அமெரிக்கா பேச்சு

சிறிலங்கா அரசாங்கத்துடன், மனித உரிமைகள், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்கள் குறித்து, அமெரிக்கா கலந்துரையாடியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அரசியல் தீர்வு விவகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் கிடப்பில் போட அனுமதியோம் – இரா.சம்பந்தன்

அரசியல் தீர்வு சம்பந்தமாக புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு காலஅவகாசம் தேவை என்பது உண்மையே என்றாலும், அதற்காக தீர்வு விடயங்களை கிடப்பில் போடுவதை நாம் அனுமதிக்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் குறுக்குவழியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஐ.நா அறிக்கையாளர்

சிறிலங்காவில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண சில நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.