மேலும்

நாள்: 7th April 2015

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் அரசியலில் நுழையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை முதல் பிரித்தானியாவில் புதிய குடிவரவு, குடியகல்வு நடைமுறை

கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர்,  பிரித்தானியா நாளை முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீளவும் அறிமுகப்படுத்தவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் – ஏமாற்றினார் சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக தாம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மரம்வெட்டும் தமிழ் கூலித் தொழிலாளர்கள் 12 பேர் ஆந்திராவில் சுட்டுக்கொலை

இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது இன்று அதிகாலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 20 வரையிலான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

புதிய ஆட்சியில் தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை உருவாக்கத் தவறிவிட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா அதிபர் முக்கிய பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஹவாஜா ஆசிப்புடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியுள்ளதாக,  பாகிஸ்தான் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன

புலம்பெயர் தமிழ் அமைப்பைச் சந்திக்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால்

அமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

போட்டியின்றி வெற்றி பெறுவார் சம்பந்தன் – கூட்டமைப்பு நம்பிக்கை

நாடாளுமன்ற மரபுகளின் படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கு உரித்தானவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

19வது திருத்தம் குறித்து கருத்து வாக்கெடுப்பு தேவையில்லை – உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்

19வது திருத்தச்சட்ட மூலம் நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால், இது தொடர்பாக கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று, சிறிலங்கா சட்டமா அதிபர் யுவாஞ்சன விஜேதிலக நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சைக்கு இன்று முடிவு – சபாநாயகர் அறிவிப்பார்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படப் போவது யார் என்பது குறித்து, இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று அறிவிக்கவுள்ளார்.