மேலும்

நாள்: 20th April 2015

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளரை நாடாளுமன்றத்தில் முன்னிலையாக சபாநாயகர் அழைப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, விசாரணைக்கு அழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பாணை விடுத்துள்ளார்.

கம்போடியாவுக்கு அகதிகளை அனுப்பும் அவுஸ்ரேலியாவின் திட்டம் கடைசி நேரத்தில் பிசுபிசுப்பு

அவுஸ்ரேலியாவினால் புகலிடம் நிராகரிக்கப்பட்ட அகதிகளை நௌருவில் இருந்து கம்போடியாவில் குடியேற்றும் திட்டத்துக்கமைய, முதல் தொகுதி அகதிகளை நொம்பென்னுக்கு அனுப்பும் திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.

நௌருவில் உள்ள 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 5 பேர் கம்போடியாவில் குடியேற இணக்கம்

நௌருவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், கம்போடியாவில் குடியேற்றப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, அகதிகளின் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகள் வெளியேற்றப்பட வேண்டும் – மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

தமிழ்ப் பகுதிகளில் போரின் போது நிறுத்தப்பட்ட ஆயுதப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற  மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில்,  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தினுள் தரையில் அமர்ந்து போராட்டம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

வடக்கிற்கு விருப்பு வாக்கு முறைமையே சிறந்தது – சுமந்திரன் கருத்து

தொகுதிவாரி தேர்தல் முறையை விட விகிதாசாரத் தேர்தல் முறை கூடுதல், ஜனநாயகத் தன்மை வாய்ந்தது என்றும், வடக்கைப் பொறுத்தவரையில் விருப்பு வாக்குமுறை சிறந்தது என்றும், கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

தேர்தல் முறை மாற்றத்துக்கு சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் எதிர்ப்பு

தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு சிறிலங்காவின் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அடுத்த ஆண்டிலேயே நாடாளுமன்றத் தேர்தல்? – மைத்திரியின் வாக்குறுதியால் சந்தேகம்

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான, அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த, கோத்தாவை விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை, விசாரணைக்கு வருமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.