மேலும்

நாள்: 5th April 2015

சிறிலங்கா அதிபரை விமானப்படைத் தளத்தில் வரவேற்றார் பாகிஸ்தான் பிரதமர்

மூன்று நாள் பயணமாக இன்று முன்னிரவில் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், விமானப்படைத் தளத்தில் நேரடியாகச் சென்று வரவேற்றார்.

பாகிஸ்தானுடனும் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு செய்கிறது சிறிலங்கா?

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பாகிஸ்தான் சென்றடையும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பல புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன.

அமெரிக்க – சீன பூகோள அரசியல் போட்டியில் இந்தியாவின் நிலை

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பூகோள-அரசியல் போட்டியில், இந்திய மாக்கடலின் அதிகார சக்தி என்ற வகையில் இந்தியா நிச்சயமாக ஒரு நடுநிலையாளராகவே செயற்படும்.இவ்வாறு The diplomat  ஊடகத்தில், Jhinuk Chowdhury எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

43 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜூனில் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க  இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும் ஜூன் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு விலக்கப்பட்டது

ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனுமான உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

செப்ரெம்பருக்குப் பின்னர் சிறிலங்கா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

வரும் செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்கா தொடர்பாக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து அமெரிக்கா இன்னமும் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படைகளிடம் இருந்து காவல்துறை அதிகாரங்களை பறிக்க சிறிலங்கா அரசு முடிவு

ஆயுதப்படைகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரங்களை, மீளப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இறுதிப் போரில் உயிர்நீத்தோருக்கு அமெரிக்கா சார்பில் முள்ளிவாய்க்காலில் இறுதி வணக்கம்

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று உயிரிழந்த இருதரப்பினருக்காகவும் மலர் தூவி இறுதிவணக்கம் செலுத்தினார்.