சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக அதுல் கெசாப் – பரிந்துரைத்தார் ஒபாமா
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிப்பதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலராகப் பணியாற்றும், அதுல் கெசாப்பின் பெயரை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.