பீஜிங் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர் – சீனத் தலைவர்களுடன் முக்கிய பேச்சு
சீனாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு பீஜிங் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சீனத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
சீனாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு பீஜிங் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சீனத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் இன்று இரத்தினபுரியில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட முதல்தொகுதி வீடுகள், இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடைபெற்றது.
சீனாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்காவின் முன்னாள் அதிபரால் கைச்சாத்திடப்பட்ட 5.3 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்கள் தொடர்பில் சமரசப் பேச்சுக்களை நடத்துவார் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கம் பரிந்துரை செய்தால், அதுகுறித்து இந்திய மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யும் என இந்திய மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
தனக்கெதிராக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட ‘பொய்யான குற்றச்சாட்டு’ தொடர்பில் நட்டஈடாக இரண்டு பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் சக்திவாய்ந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமை, தெற்காசியாவில் வியத்தகு களத்தை திறந்து விட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஒற்றையாட்சி முறையினால் தமிழ்மக்களுக்கு விமோசனம் கிடைக்காது என்றும், அது நீக்கப்பட்டு கூட்டாட்சி முறை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்.
காங்கேசன்துறையில் கட்டப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய அதிபர் மாளிகையின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள, சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் பயணமான இன்று சீனாவுக்குச் செல்லவுள்ளார். இன்றிரவு பீஜிங்கை சென்றடையும் அவருக்கு, நாளை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோர் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கவுள்ளனர்.