மேலும்

சிறிலங்கா- சீன உறவை, மீண்டும் மேலுயர்த்த வேண்டும் – சீன அதிபர் வலியுறுத்தல்

maithri-xi (1)முக்கியமான நோக்கத்தை நிறைவேற்ற சிறிலங்கா- சீன உறவை, மீண்டும், ஊக்குவித்து மேலுயர்த்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீன அதிபர் ஜி ஜின்பின் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பீஜிங்கில் உள்ள மக்கள் மகா மண்டபத்தில், வரவேற்று உரையாற்றிய போதே, சீன அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில், “நீங்கள் சீன மக்களின் பழைய நண்பர்கள்.

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பாரம்பரியமான நட்புறவை புதிய சகாப்தத்தை நோக்கி கட்டியெழுப்புவதற்கு,  நாம் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

எல்லாத் துறைகளிலும் பரஸ்பரம் இருதரப்புக்கும் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த,ஒருவர் மற்றவருக்கு உண்மையாக உதவும் வகையில் நோக்கிச் செல்வதற்கேற்றவாறான மூலோபாயக் கூட்டையே சீனா விரும்புகிறது.

maithri-xi (1)

maithri-xi (2)

maithri-xi (3)

maithri-xi (4)

maithri-xi (5)

பிராந்தியத்தில் சிறிலங்காவை எப்போதுமே, முக்கியமான இராஜதந்திர நிலையில் தான் சீனா வைத்திருக்கிறது. சிறிலங்காவை ஒரு மூலோபாயப் பங்காளராகவே சீனா கருதுகிறது.

முக்கியமான நோக்கத்தை நிறைவேற்ற சிறிலங்கா- சீன உறவை, மீண்டும், ஊக்குவித்து மேலுயர்த்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சீன அதிபரின் உரைக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்த பதில், மக்கள் மகாமண்டபத்தில் மொழிபெயர்ப்புச் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, சீன அதிபர் தலைமையிலான குழுவினருக்கும், சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *