மேலும்

மாதம்: March 2015

சிறிலங்காவுக்கு வழங்கிய கடன்கள் விடயத்தில் சீனா கடும்போக்கு

சிறிலங்காவின் வேண்டுகோளின் பேரில், இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டதற்கமையவே, சிறிலங்காவுக்கு கடன்களை சீனா வழங்கியுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பங்கு – ஜோன் கெரி பாராட்டு

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வகித்த பங்கை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார். இன்று ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில், உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அமர்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

சிறிலங்கா – இந்திய இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் கொழும்பில் ஆரம்பம்

சிறிலங்கா – இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான நான்காவது கட்டப் பேச்சுக்கள் இன்று கொழும்பில் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

மீண்டும் அதிகாரத்துக்கு வரும் ராஜபக்சவினரின் திட்டம் தோல்வி

ஊவா மாகாணசபை முதலமைச்சராக தம்மை மீண்டும் நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கவிழும் நிலையில் கிழக்கு மாகாணசபை – ஆறு உறுப்பினர்கள் ஆதரவை விலக்கினர்

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள், இன்று விலக்கிக் கொண்டுள்ளனர்.

புதுடெல்லியில் உடன்பாட்டில் கையெழுத்திடுவதை வேண்டுமென்றே தவிர்த்தேன் – சிறிலங்கா அதிபர்

தனது புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு உடன்பாட்டைச் செய்து கொள்ளும் விவகாரம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த போதும், தாம் அதனை வேண்டுமேன்றே தவிர்த்ததாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சோதிடத்தை இப்போது நம்புவதில்லையாம்- மகிந்த கூறுகிறார்

தாம் இப்போது சோதிடத்தை நம்புவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டோன் நாளிதழின் செய்தியாளருடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசின் ஊழல்களை விசாரிக்க அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியாவிடம் உதவி

முன்னைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விசாரணையை இடைநிறுத்த 300 மில்லியன் ரூபா இலஞ்சம்

காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட, மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதற்கு, முக்கிய அமைச்சர் ஒருவருக்கு 300 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க, குறிப்பிட்ட கடல் பாதுகாப்பு நிறுவனம் முயன்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – காலையில் ஜோன் கெரி, பிற்பகலில் மங்களவின் உரை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று  ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.