மேலும்

சிறிலங்காவுக்கு வழங்கிய கடன்கள் விடயத்தில் சீனா கடும்போக்கு

Chinese Foreign Ministry spokesperson, Hua Chunyingசிறிலங்காவின் வேண்டுகோளின் பேரில், இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டதற்கமையவே, சிறிலங்காவுக்கு கடன்களை சீனா வழங்கியுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு சீனா வழங்கிய 5 பில்லியன் டொலர் கடன்கள் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த சனிக்கிழமை கவலை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சீனாவுடன் பேச்சு நடத்த சிறிலங்கா நிதியமைச்சர் விரைவில் பீஜிங் வருவார் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து பீஜிங்கில் இன்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சன்யிங்,

“சிறிலங்காவின் அபிவிருத்தியை ஊக்குவிக்க உதவும் வகையில், பரஸ்பரம் நன்மையளிக்கும் கொள்கைகளுக்கு அமையவே கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் வேண்டுகோளுக்கு அமைய, கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் கடன்களை வழங்கியுள்ளோம்.

முழு நாட்டுக்கும், மக்களுக்குமாக வழங்கப்பட்ட இந்தக் கடன்கள், சிறிலங்காவின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் சாதகமான பங்கை ஆற்றியிருக்கின்றன.”  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *