மேலும்

மாதம்: February 2015

மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாக பெற்று வந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி

சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர், சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும், தாமரைக் கோபுரம் (Lotus Tower) கட்டுமானப் பணிக்கான ஆலோசனைக் கட்டணமாக மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாகப் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிஷா பிஸ்வாலுக்கும் அப்பம் – கொழும்பில் தொடரும் ‘அப்பம்’ இராஜதந்திரம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தனது நேற்றைய நீண்ட சந்திப்புகளை, இராப்போசன விருந்துடன் நிறைவு செய்ததாக டுவிட்டரில் எழுதியுள்ளார்.

யாழ். செல்லவில்லை நிஷா பிஸ்வால் – சிறிலங்கா பயணம் நிறைவு

தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்துக்குச் செல்லாமல் இன்றுடன் தனது சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொள்ளவுள்ளார்.

நிஷா பிஸ்வாலுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர், தலைமைச் செயலர் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய தலைமைச் செயலராக சிறிலங்கா நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரியான ஏ.பத்திநாதன் இன்று காலை  பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க – சிறிலங்கா இராஜதந்திர உறவு புதிய மட்டத்தை எட்டும் – மங்கள சமரவீர

அமெரிக்கா இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்தவாரம் வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மனித உரிமைகள் பிரச்சினையை தீர்க்க சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயார் – நிஷா பிஸ்வால்

மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்களில் சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது

ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் கோத்தா அபகரித்த தமிழ்மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சம்பிக்க ரணவக்க

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தமிழ் மக்களிடம் இருந்து அபகரித்த காணிகள் மீண்டும் அவர்களிடமே வழங்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் நிஷா பிஸ்வால் – இன்றும் நாளையும் முக்கிய பேச்சு

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக  இன்று அதிகாலை கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.