மேலும்

நாள்: 28th February 2015

ஐ.நா உயர் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் கூட்டமைப்பு, மைத்திரியுடன் பேச்சு

சிறிலங்காவுக்கு இன்று வருகை தந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர்மட்டப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சீன நீர்மூழ்கிகளை மீண்டும் சிறிலங்கா வர இடமளியோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர

சீன நீர்மூழ்கிகள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அனுமதிக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கச்சதீவு செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞர் இராமேஸ்வரத்தில் கைது

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், அனுமதியின்றி கச்சதீவு செல்ல முயன்ற கிளிநொச்சியைச் சேர்ந்த இலங்கை அகதி ஒருவர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் கெப்பிட்டிவலன இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் டி.சி.கெப்பிட்டிவலன, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு

இந்தியாவின் 2015/16ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்காவுக்கான உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

லண்டனுக்குச் செல்கிறார் மைத்திரி – மகிந்தவுக்கு கிடைக்காத வரவேற்புக்கு மகாராணி ஏற்பாடு

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் லண்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

11 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைந்தது சிறிலங்காவின் பணவீக்கம்

சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக சிறிலங்காவின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

சீனாவுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் சிறிலங்கா – சீனப் பிரதமர் நம்பிக்கை

சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டுக்கு உகந்த சூழலை சிறிலங்கா ஏற்படுத்தும் என்று நம்புவதாக சீனப் பிரதமர் லி கெகியாங் தெரிவித்துள்ளார்.