மேலும்

நாள்: 22nd February 2015

அடுத்தமாத இறுதியில் சீனா, பாகிஸ்தான் செல்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பதவியேற்ற பின்னர், முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட நிலையில், அடுத்து, சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவுக்கான தூதுவராக முக்கிய இராஜதந்திரியை நியமிக்கிறது அமெரிக்கா

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லியில் மைத்திரியை சந்தித்த சிறிலங்காவின் முக்கிய போர்க்குற்றவாளி

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, போர்க்குற்றவாளிகளில்  முக்கியமானவராக குற்றம்சாட்டப்பட்டு வரும் சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சந்தித்துப் பேசியுள்ளார்.

தனது அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை என்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பாதுகாப்பு அமைச்சில் தனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மறுத்துள்ளார்.

சுதந்திர நாள் அணிவகுப்பில் அரச தலைவர்களைக் கொல்லச் சதி – புலனாய்வுத் தகவலால் முறியடிப்பு

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், புதிய அரசாங்கத்தின் தலைவர்களைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று குறித்து முன்னரே தகவல் கிடைத்ததால், அதனைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.