மேலும்

நாள்: 24th February 2015

தமிழ்மக்களை ஐ.நா ஏமாற்றிவிட்டது – யாழ். பேரணியில் மன்னார் ஆயர் உரை

விசாரணை அறிக்கையைப் பிற்போட்டுள்ளதன் மூலம், தமிழ் மக்களை ஐ.நா ஏமாற்றி விட்டதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறது பொது பலசேனா

அரசியலில் நுழைவது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும், வரும் ஏப்ரலுக்குப் பின்னர் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடக் கூடும் என்று, பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட பேரணி

ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிட வலியுறுத்தியும், படையினரின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில்  பெரியளவிலான அமைதிப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம் – தேர்தல் பிற்போடப்படலாம்?

இந்த ஆண்டு நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல், ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.

கதிர்காமத்தில் மகிந்த குடும்பத்துடன் வழிபாடு – மீண்டும் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் திட்டம்?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கதிர்காமத்தில் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுக் காலை வரை வழிபாடு நடத்தியுள்ளார்.

சசி வீரவன்சவுக்கு விளக்கமறியல் – மோசடிக்கு விமல் வீரவன்சவும் உடந்தை

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திரக் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை வரும், 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன், அவர் வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.