மேலும்

நாள்: 20th February 2015

ஜெனிவாவுக்கான புதிய இந்தியப் பிரதிநிதியாக அஜித் குமார் நியமனம்

ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், தூதுவராகவும், அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவுக்கு நிலத்தை சொந்தமாக வழங்க முடியாது – சிறிலங்கா

1.5 பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரில், சீனாவுக்கு ஒரு பகுதி நிலத்தை சொந்தமாக வழங்கும் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டு விதி மீளாய்வு செய்யப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

28 தமிழ் இளைஞர்களை கடத்திப் படுகொலை செய்த 9 சிறிலங்கா கடற்படையினர் விரைவில் கைது

கொழும்பில் கப்பம் கோரிக் கடத்திய 28 தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்த, மூன்று உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 9 சிறிலங்கா கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 2ம் நாள் ஜெனிவா செல்கிறார் மங்கள சமரவீர

சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரும் 2ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா – அதிபர் செயலகம் அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் பொருளாதாரத்தை முன்னேற்ற அனைத்துலக நிதி நிறுவனங்கள், அமெரிக்காவுடன் பேச்சு

சிறிலங்காவின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கு, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் ஆகியவற்றின் உதவியை புதிய அரசாங்கம் நாடியுள்ளது.

மோடியின் திட்டத்தை நிராகரித்தார் மைத்திரி

மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன் வைத்த திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

13 பிளஸ் அழுத்தங்களைக் கைவிட்டது இந்தியா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தியா 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும்படி வலியுறுத்தவில்லை என்று, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.