மேலும்

நாள்: 11th February 2015

அகதிகளை இப்போது அனுப்ப வேண்டாம் – மோடியிடம் கோருவாராம் மைத்திரி

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய  சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துக் கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமனம்

ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோத்தா கறைபடுத்திய பாதுகாப்புச் செயலர் பதவி வேண்டாம் – சரத் பொன்சேகா

கோத்தாபய ராஜபக்சவின் கறைப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் செயலர் பதவியைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க சீனா உதவ வேண்டும் – இரா.சம்பந்தன்

தமிழர்கள் தமது பகுதியில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தன்னாட்சியுடன் கூடிய தீர்வையே விரும்புவதாகவும், அத்தகைய நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனப்படுகொலைத் தீர்மானம்: இந்தியா அதிருப்தி – சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் உறுதி

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் இனப்படுகொலைத் தீர்மானத்தை சிறிலங்கா அரசு நிராகரிப்பு

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்றும் இதுகுறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம், நிராகரித்துள்ளது.

சிறிலங்கா அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் – நியுயோர்க் ரைம்ஸ்

போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சிறிலங்காவில் நடத்தும் விசாரணை அறிக்கையை கால தாமதமின்றி வெளியிட வேண்டும் என்று நியுயோர்க் ரைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.