மேலும்

நாள்: 17th February 2015

வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமி காலமானார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி (வயது-67) இன்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

சிறிலங்கா – இந்திய உறவு நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சியாம்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையை வெளியிடுவதில் பிரித்தானியா உறுதி

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான, ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதில், பிரித்தானியா உறுதியாக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

காலதாமதம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான காலஅவகாசமாக அமையக் கூடாது – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்த அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போட ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள முடிவு, அத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு அனுமதிப்பதாக அமையக் கூடாது என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த

சிறிலங்கா இராணுவத்தின்  புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அறிக்கையைப் பிற்போடும் ஐ.நாவின் முடிவுக்கு அமெரிக்கா, சிறிலங்கா வரவேற்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா நடத்திய விசாரணையின் அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை, அமெரிக்காவும், சிறிலங்காவும் வரவேற்றுள்ளன.

இந்திய பாதுகாப்பு, நிதி அமைச்சர்களை தனித்தனியாகச் சந்தித்தார் மைத்திரி

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும், நிதி அமைச்சர் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பில் அதிரடி மாற்றம் – யாழ்., வன்னி, கிழக்கு படைத் தளபதிகளுக்கு இடமாற்றம்

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு, 15 மேஜர் ஜெனரல்கள் மற்றும் மூன்று பிரிகேடியர் தர அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒத்திவைப்பு கவலையோ, மகிழ்ச்சியோ இல்லை – இரா.சம்பந்தன்

ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள தீர்மானம், தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கை செப்ரெம்பர் வரை ஒத்திவைப்பு – ஒருமுறை மட்டும் அவகாசம் என்கிறார் ஆணையாளர்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கையை வெளியிடுவதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.